வேற 'மாவட்டங்கள்'ல இருந்து... 'சென்னை' வர்றவங்களுக்கு,,.. இனிமே 'quarantine' இருக்குமா??.. சென்னை மாநகராட்சி ஆணையர் 'விளக்கம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் மாத இறுதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

வேற 'மாவட்டங்கள்'ல இருந்து... 'சென்னை' வர்றவங்களுக்கு,,.. இனிமே 'quarantine' இருக்குமா??.. சென்னை மாநகராட்சி ஆணையர் 'விளக்கம்'...

பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை கொண்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். மேலும், தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது போல நிறுவனங்களுக்கும் சென்று சோதனை மேற்கொள்ளப்படும் என பிரகாஷ் தெரிவித்தார். மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதே போல, தமிழகத்திற்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை வருபவர்களுக்கு 14 நாட்கள் வீட்டுத் தனிமை இல்லை என்றும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும், அறிகுறி இல்லை என்றால் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் தகரம் கொண்டு அடைக்கப்பட்டது குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மக்களை ஒத்துழைப்பு சிறந்த முறையில் உள்ளதால் இனிமேல் அது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்