மகளைக் காண ஆட்டோவில் கிளம்பிய 'மூதாட்டி'... கொஞ்ச நேரத்துல ஆட்டோ டிரைவருக்கு வந்த போன் கால்... "உடனே திரும்பி வாங்க"... போலீசாரின் பதிலால் தல சுத்திப் போன 'ஆட்டோ' டிரைவர்!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை எம்.ஜி.ஆர் நகர் கட்டபொம்மன் பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்ற மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கே.கே நகர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மகளைக் காண ஆட்டோவில் கிளம்பிய 'மூதாட்டி'... கொஞ்ச நேரத்துல ஆட்டோ டிரைவருக்கு வந்த போன் கால்... "உடனே திரும்பி வாங்க"... போலீசாரின் பதிலால் தல சுத்திப் போன 'ஆட்டோ' டிரைவர்!!!

இந்நிலையில், நேற்று இரவு அந்த மூதாட்டி மருத்துவமனையில் இருந்து தப்பித்து, நெய்வேலியில் இருக்கும் தனது மகளை காண ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவரின் தொலைபேசி மூலம் தனது மகளை தொடர்பு கொண்ட மூதாட்டி, தான் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார். மூதாட்டி மருத்துவமனையில் காணாமல் போன நிலையில், போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த மூதாட்டியின் மகள் நெய்வேலியில் இருப்பதை அறிந்து கொண்ட போலீசார், அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது தனது தாய், ஆட்டோ மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்டோ டிரைவர் எண்ணை பெற்றுக் கொண்ட போலீசார், ஆட்டோ டிரைவருக்கு தொடர்பு கொண்டு அந்த மூதாட்டிக்கு கொரோனா இருக்கும் தகவலை தெரிவித்து அவரை மீண்டும் சென்னைக்கு கொண்டு வர தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதிக்கு ஆட்டோ வந்ததும் மீண்டும் அந்த மூதாட்டி தப்பியோட முயன்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் அறிவுரை கூறி உங்களுக்கு எதுவும் நேராது என கூறி மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா தொற்றின் காரணமாக நாம் இறந்து விடுவோமா என்ற பயத்தில் தனது மகளை காண மூதாட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் மூதாட்டி தப்பித்து சென்றதால் அந்த ஆட்டோ டிரைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்