'திருமணத்தில் ஜாலியா கூடியிருந்த உறவினர்கள்'... 'கல்யாணத்திற்கு இப்படி ஒரு எதிர்பாராத செலவா'?... சென்னையில் நடந்த பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கல்யாணத்திற்குச் செலவு செய்த கையேடு அபராதத்திற்கு ஒரு தொகையையும் கொடுத்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த திருமண வீட்டார்.

'திருமணத்தில் ஜாலியா கூடியிருந்த உறவினர்கள்'... 'கல்யாணத்திற்கு இப்படி ஒரு எதிர்பாராத செலவா'?... சென்னையில் நடந்த பரபரப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை படுதீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் இராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள எம்.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் ஓட்டேரி கொசப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் இல்லத் திருமணம் நடைபெற்றது. மாநகராட்சியில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறி அனுமதி வாங்கி திருமண நிகழ்ச்சி நடந்து வந்துள்ளது.

Chennai officials imposed 1 lakh fine for Marriage violation

இந்தச்சூழ்நிலையில் வருவாய்த் துறை அதிகாரி ஜஸ்டினா மற்றும் ஜோசப் தங்கராஜ் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருமண மண்டபத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசு உத்தரவை மீறி 200-க்கும் அதிகமான நபர்கள் திருமண நிழச்சியில் கலந்துகொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதிக கூட்டத்தைக் கூட்டியதன் காரணமாக மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.90,000, திருமண நடத்தியவர்களுக்கு ரூ10,000 என மொத்தமாக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பணத்தை வசூலித்துச் சென்றனர். திருமண வீட்டார் இதனைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Chennai officials imposed 1 lakh fine for Marriage violation

இதற்கிடையே தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,48,064 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,48,064 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்