‘திடீர்னு பாதியிலே நின்ற லிப்ட்’.. நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு.. மின்விசிறியை கழற்றி பயணிகளை மீட்ட திக்திக் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் திடீரென லிப்ட் பழுதாகி பயணிகள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘திடீர்னு பாதியிலே நின்ற லிப்ட்’.. நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு.. மின்விசிறியை கழற்றி பயணிகளை மீட்ட திக்திக் சம்பவம்..!

அதிவேகமாக வந்த சிவப்பு கார்.. போலீசை பார்த்ததும் தப்பி ஓடிய நபர்கள்.. ‘உள்ள என்ன இருக்குன்னு பாருங்க’.. சென்னையில் அதிர்ச்சி..!

சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் பிரதான பகுதியில் முதல் தளத்தையும், தரை தளத்தையும் இணைக்கும் வகையில் லிப்ட் உள்ளது. நேற்றிரவு சுமார் 8 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்காக பயணிகள் ஏறியுள்ளனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்ட்

அப்போது லிப்ட் திடீரென பழுதாகி முதல் தளத்துக்கும், தரை தளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதனால் லிப்டில் இருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். உடனே லிப்ட்டின் உள்ளே கொடுக்கப்பட்ட அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனாலும் அந்த எண் தொடர்ந்து சில நிமிடங்கள் பிசியாகவே இருந்தாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Nungambakkam railway station lift stopped in half way

லிப்ட் மேற்கூரை

இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லிப்டின் பழுது நீக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், லிப்டின் மேற்பகுதியில் உள்ள மின்விசிறியை தீயணைப்பு வீரர்கள் கழற்றினர். இதனை அடுத்து லிப்டின் மேற்கூரை வழியாக ஒவ்வொருவராக மீட்டனர்.

Chennai Nungambakkam railway station lift stopped in half way

காரணம் என்ன?

இதில் ஒன்றரை வயது குழந்தை, பெண்கள், ஆண்கள் என 14 பேர் சிக்கிக் கொண்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பின் அனைவரும் பத்திரமாக மீட்டக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், லிப்ட் பழுதானதற்கான காரணம் குறித்து என்பது ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெட்ரோ பணியால் போக்குவரத்து மாற்றம்..! இந்த ரூட் வழியா போறவங்க செக் பண்ணிக்கங்க..!

CHENNAI, NUNGAMBAKKAM, RAILWAY STATION, RAILWAY STATION LIFT, HALF WAY, PASSENGERS STUCK, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன், லிப்ட்

மற்ற செய்திகள்