'சென்னை மெட்ரோ ரயிலில் 'நோ ஏசி' ...'காரணம் நல்லா தான் இருக்கு'...ஆனா,அதிர்ச்சியில் பயணிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு,சென்னை மெட்ரோ ரயிலையும் விட்டு வைக்கவில்லை.இதனால் ரயில்களில் ஏசியை அணைத்து வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

'சென்னை மெட்ரோ ரயிலில் 'நோ ஏசி' ...'காரணம் நல்லா தான் இருக்கு'...ஆனா,அதிர்ச்சியில் பயணிகள்!

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.அதிலும் சென்னையின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.தமிழகத்தின் சில இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில்,சென்னையில் ஒரு துளி மழை கூட பெய்யவில்லை.இதனால் சென்னையில் கடுமையான வெப்பம் நிலவுவதுடன்,கடுமையான தண்ணீர் தட்டுப்படும் நிலவுகிறது.இது சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டமும் குறைந்து வருவதால்,வரும் நாட்களை எப்படி சமாளிக்க போகிறோம் என்பதே,சென்னை மக்களுக்கு பெரும் கேள்வி குறியாக உள்ளது.

இதனிடையே கடுமையாக நிலவும் தண்ணீர் பிரச்சனையின் காரணமாக,சென்னை மெட்ரோ ரயில்களில் ஏசியை அணைத்து வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலுக்காக தினசரி தண்ணீர் தேவை என்பது 9,000 லிட்டர் ஆகும்.இதில் 80 சதவீத தண்ணீர் மெட்ரோவின் ஏசி பயன்பாட்டிற்காகவே செலவிடப்படுகிறது.இந்நிலையில் தண்ணீரின் தேவையை உணர்ந்து,ஏசியை அணைத்து வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சென்னை மெட்ரோ மேற்கொள்ளவிருக்கும் இந்த சிக்கனநடவடிக்கை மூலம்,தினசரி 30 சதவீத தண்ணீரை சேமிக்க முடியும்.பொதுவாக மதியம் முதல் மாலை 5 மணி வரை மக்களின் கூட்டம் குறைவாக இருக்கும்.அந்த நேரத்தில் ரயிலின் ஏசியை அணைத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 டிகிரி செல்சியஸ் என்ற சீரான நிலையில் ரயிலுக்குள் வெப்பநிலையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது.அதற்கு மேல் வெப்பநிலை செல்லும்போது, ஏசியை ஆன் செய்யவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு மெட்ரோ நிர்வாகம் எடுக்கவிருக்கும் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும்,மறுபுறம் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளை கவலை அடைய செய்துள்ளது.வெயிலில் அலைந்து திரிந்து மெட்ரோவில் ஏறுவது,ஏசியில் கொஞ்ச நேரமாவது நிம்மதியாக செல்லலாம் என்பதற்காக தான்.ஆனால் மதிய நேரங்களில் ஏசியை அணைத்து வைத்தால், நிம்மதியாக பயணிக்க முடியாது என்பதே பயணிகளின் கருத்தாக உள்ளது.

CHENNAI METRO RAIL, AC, WATER CRISIS, CMRL