'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்!.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரயில்களை இயக்குவதில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வழிமுறைகள் :
1. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
2. ரயில் நிலைய படிக்கட்டுகளை தொடக் கூடாது, லிப்ட் உள்ளே இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
3. நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் அவசியம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும். பின்னர் அனைவருக்கும் கிருமி நாசினி அளிக்கப்படும்.
4. டிக்கெட் வழங்குவதில் இனி டோக்கனுக்கு பதிலாக முழுமையாக ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்பட உள்ளது.
5. சாதாரணமாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும், அவசரமான நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். காலை 8-10 மற்றும் மாலை 6-10 நேரங்களில் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள் என்பதால் அப்போது 5 நிமிட இடைவெளியில் 35 ரயில்கள் இயக்கப்படும்.
6. ரயிலின் உள்ளே 6 நபர் அமரக்கூடிய இருக்கையில் இனி 2 நபர்கள் மட்டுமே அமர்வதற்கு அனுமதி. ஒரு ரயிலில் 1,270 பயணிகள் பயணிக்கலாம் என்றால், இனி 160 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதனை ஈடு செய்யும் வகையில் குறைந்த நேர இடைவெளியில் அதிக ரயில்கள் இயக்கப்படும்.
ஊரடங்கு அமலில் இருந்த கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு ரயில்கள் மற்றும் கட்டுப்பாடு அறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயில்கள் தயாராக இருக்கின்றன. எனவே, மெட்ரோ ரயில்கள் இயக்க அரசு அனுமதி அளித்த உடன் பயணிகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரயில்கள் உடனடியாக இயக்கப்படும் என்று ரயிவ்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்