'இருங்க மக்கா, நம்மள வச்சு செய்ய போகுது'... 'அடுத்து வரும் ஏழு நாட்கள்'... வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அடுத்து வரும் 7 நாட்கள் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

'இருங்க மக்கா, நம்மள வச்சு செய்ய போகுது'... 'அடுத்து வரும் ஏழு நாட்கள்'... வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாதம் தான் அக்னி வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால் இன்னும் மே மாதமே ஆரம்பிக்காத நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாகப் பகல் நேரத்தில் வெப்ப கற்று வீசுவதால் புழுக்கம் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தைத் தவிர்க்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாகத் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Chennai Meteorological Center warning do not come out during 12pm to 4

மேலும் வருகின்ற 4ம் தேதி வரை தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

Chennai Meteorological Center warning do not come out during 12pm to 4

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அனல்காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்