"பிரியாணி கேட்டதுக்கா இப்படி?".. கோபத்தில் இருந்த கணவர்.. அடுத்த கணமே கேட்ட அலறல் சத்தம்!!.. மிரண்ட அயனாவரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரியாணியின் பெயரில் வந்த சண்டையால், கணவன் மனைவி இடையே நடந்த தகராறும் அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த அயனாவரம், தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் கருணாகரன். இவரது மனைவியின் பெயர் பத்மாவதி. கருணாகரன் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த தம்பதியினருக்கு குமார், மகேஸ்வரி, சகிலா மற்றும் கார்த்திக் என நான்கு பிள்ளைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் திருமணம் செய்து தனித்தனியாகவும் வசித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கருணாகரன் மற்றும் பத்மாவதி ஆகியோர் தனிமையின் காரணமாக மனச் சிக்கல் ஏற்பட்டு சில ஆண்டுகள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பின்னர் தற்போது அயனாவரம் தாகூர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில் தான் கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது. திடீரென கருணாகரன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கே வந்து பார்த்துள்ளனர். இதன் பின்னர் தீயை அணைத்து அவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கே கருணாகரன் மற்றும் பத்மாவதி ஆகியோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது மேஜிஸ்திரேட் முன்னிலையில் தீவிர சிகிச்சையில் பிரிவில் இருந்த பத்மாவதி, மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த கருணாகரன், பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டு இருந்ததாகவும், தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்டதன் காரணமாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கணவர் தீ வைத்ததாகவும் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும், தன் மீது தீ வைத்ததும் கணவரை ஓடி போய் பத்மாவதி கட்டிப் பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கு மத்தியில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மறுபக்கம் 50 சதவீத தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கருணாகரன்.
Also Read | பாதியில் நின்ன படிப்பு.. உடனே இளைஞர் எடுத்த புது ரூட்.. "ஒரு வருஷத்துல இத்தன கோடி ரூபாய் வருவாயா?"
மற்ற செய்திகள்