தவறான தொடர்பு... தந்திரமாக 'வரவழைத்து' கொன்ற கணவன்... உடலை மீட்க ஆந்திரா 'விரைந்த' போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தவறான தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்க, சென்னை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.
சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தார் சென்னை போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடைசியாக ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது தெரியவந்தது.
அந்த எண்ணுக்கு கடைசியாக வந்த போன் கால்களை வைத்து ஆந்திராவை சேர்ந்த சிவக்குமார்-மாதேஸ்வரி தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சில மாதங்களுக்கு முன் சிவக்குமார்-மாதேஸ்வரி தம்பதி சென்னை வந்து வேலைபார்த்த போது கார்த்திகேயன், மாதேஸ்வரி இருவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை விட்டு ஆந்திரா கிளம்பிய பின்னரும், கார்த்திகேயன் அடிக்கடி போன் செய்து மாதேஸ்வரியை தொல்லை செய்துள்ளார். இதை முடிக்க எண்ணிய மாதேஸ்வரி, குளிக்கும்போது தனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு கார்த்திகேயன் தன்னை மிரட்டுவதாக கணவனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், மாதேஸ்வரியை வைத்து கார்த்திகேயனை வரவழைத்து அவரை தீர்த்து கட்டி அவரை வீட்டின் பின்புறமாக புதைத்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து போலீசார் தற்போது கார்த்திகேயனின் உடலை மீட்க ஆந்திரா விரைந்துள்ளனர்.