பைக்கில் சென்ற சார்பதிவாளர் கழுத்தை அறுத்த ‘மாஞ்ச நூல்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பைக்கில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் சென்ற சார்பதிவாளர் கழுத்தை அறுத்த ‘மாஞ்ச நூல்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (57). இவர் ராயப்பேட்டையில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டு இருந்துள்ளார். கிண்டி சிட்டி லிங்க் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்த வந்த மாஞ்சா நூல் ஒன்று வெங்கட்ராமனின் கழுத்தை அறுத்துள்ளது.

இதனால் வெங்கட்ராமனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஞ்சா நூல் பயன்படுத்த தடை உள்ள நிலையில், ஊரடங்கு சமயத்தில் பலரும் மாஞ்சா நூல் பட்டம் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் பெற்றோருடன் பைக்கில் சென்ற குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்