‘முதலாளிக்கே’ கடன் கொடுத்த.. ‘சென்னை இளைஞருக்கு’ நடந்த பரிதாபம்.. ‘அதிரவைக்கும் வீடியோ, டைரி’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொடுத்த கடனை திரும்ப பெற முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘முதலாளிக்கே’ கடன் கொடுத்த.. ‘சென்னை இளைஞருக்கு’ நடந்த பரிதாபம்.. ‘அதிரவைக்கும் வீடியோ, டைரி’..

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (32). திருமணமாகாத இவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் கேசியராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை தன் முதலாளியான ஹோட்டல் உரிமையாளர் குமார் என்பவருக்கு ரூபாய் 5 லட்சம் பணத்தைக் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலருக்கு கடன் கொடுத்திருந்த செல்லதுரை கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்லதுரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கு முன் செல்லதுரை டைரி ஒன்றில் 7 பக்கங்களுக்கு தான் யாருக்கெல்லாம் கடன் கொடுத்துள்ளேன் என எழுதிவைத்துள்ளார். அத்துடன் கண்ணீருடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு வைத்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், “எல்லோரையும் நான் கஷ்டப்படுத்திவிட்டேன். கொடுத்த பணத்தை என்னால் திரும்ப வாங்க முடியவில்லை. எல்லோரையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உடம்புக்குத் தேவையானதை சாப்பிடுங்கள். எனக்கு வேறு யோசனை தோன்றவில்லை. நான் உங்களோடு வாழ ஆசைப்பட்டேன். எனக்கு கிடைத்தது போல அம்மா, அப்பா யாருக்கும் கிடைக்காது” எனக் கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

MONEY, CHENNAI, DEBT, SUICIDE, HOTEL, VIDEO, DIARY