'என் மனைவிய ஏன்யா பாக்குற?'.. நியாயம் கேட்ட கணவருக்கு கோயம்பேட்டில் நடந்த மிரளவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு பேருந்து நிலையத்தில், தனது மனைவியையே தொடர்ந்து தகாத பார்வையில் பார்த்துக்கொண்டிடுருந்த இளைஞருடன் சண்டையிட்ட கணவருக்கு நேர்ந்த கதி பலரையும் பரபரப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.
40 வயது மதிக்கத்தக்கவரான பேபி என்பவர் தனது மனைவி தேவியுடன், மதுரவாயல் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர், பேபியின் மனைவி தேவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேபி, உடனே அந்த நபரிடம் சென்று தன் மனைவியை தகாத முறையில் பார்த்த்துக் கொண்டிருந்ததை கண்டித்து எதிர்த்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பேபியின் கைவிரலை கடித்துள்ளார். உடனே பேபி வீலென்று அலறியுள்ளார்.
அவர் கத்தியதும் தப்பிக்க முயன்ற அந்த நபரை, பேருந்து நிலையத்தில் கூடியிருந்தவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சக்திவேல் என்று தெரியவந்ததை அடுத்து அவரை கோயம்பேடு போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். விரலை பறிகொடுத்த பேபி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.