'உடம்பு சரியில்லன்னு மெடிக்கல் லீவ் எடுத்த பெண் ஊழியர்'... 'திடீரென 'HR' அனுப்பிய மெயில்'... 'ஆடிப்போன டிசிஎஸ் ஊழியர்'... அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் லதா கோவிந்தசாமி. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக 22 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவருக்கான பணி ஒதுக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் நிர்வாகத்திடம் கேட்டபோது, ''நீங்கள் பதவிக்குத் தேவையான தகுதிகளை மேம்படுத்திக் கொள்ளவில்லை, எனவே உங்களுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 மே 2ஆம் தேதி லதா கோவிந்தசாமிக்கு திடீரென மயக்கம் மற்றும் டிஹைட்ரேட் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விடுப்பு எடுத்துள்ளார். பின்னர் மருத்துவ விடுப்பு குறித்த சான்றிதழ்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் ''உங்களைப் பணி நீக்கம் செய்து விட்டதாகக் கூறி'', அதற்கான உத்தரவை ஜூன் மாதம் டிசிஎஸ் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு லதாவுக்கு அனுப்பியுள்ளது. இதைப் பார்த்த லதா அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் முறையான மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்தும் ஏன் நிர்வாகம் தன்னை பணிநீக்கம் செய்தது என்பது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர், சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் லதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ''டிசிஎஸ் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன்னை மீண்டும் பணியில் அமர்த்தி உத்தரவிட கோரியும், பணியிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு 18% வட்டியுடன் ஊதியத்தை வழங்க வேண்டும்'' எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி என்.வேங்கடவரதன், ''லதா தாக்கல் செய்த ஆவண ஆதாரங்களைப் பார்க்கும்போது அவர் சட்டவிரோதமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து சம்பளப் பாக்கியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும் எனவும், லதாவை 3 மாதத்தில் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்'' என்றும் டிசிஎஸ் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்