'வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை...' விலை உயர்வுக்கு என்ன காரணம்...? - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ரூ.216 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

'வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை...' விலை உயர்வுக்கு என்ன காரணம்...? - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

தமிழகத்தில் கொரோனா காலத்திலாவது இந்த தங்கத்தின் விலை குறையும் என நினைத்த சிலருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனலாம். கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாதபடி அதிக அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பொதுவாகவே குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் அதிகம் விரும்பி அணியும் பொருளாக தங்கம் உள்ளது. அது ஒரு பொருளாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக மிகுந்த மவுசை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை வியாபாரம் தொடங்கியதும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.27 உயர்ந்து, ரூ.5,064க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.216 உயர்ந்து ரூ.40,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தொடர்ந்து 8-வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேதான்  இருக்கிறது தவிர விலை குறைந்தபாடில்லை. அதுமட்டுமில்லாமல் ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை 9 நாள்களில் சவரனுக்கு ரூ.2,900 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மதிப்பு உயர்த்துவதற்கு காரணம் கொரோனா தான் எனவும் குறிப்பிடுகின்றனர். அதாவது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், சா்வதேச அளவில் தொழில்துறை தேக்கத்தைச் சந்தித்தது. இதைத்தொடா்ந்து, உலகம் முழுவதுமே முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைக் கருதி, அதில் முதலீடு செய்தனா். இதன் காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்தது.

ஏப்ரல் மாதம் ஒரு சவரன் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரமாக இருந்த தங்கத்தின் மதிப்பு தற்போது ரூ.40,512-மாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை தொடா்ந்து உயரவே வாய்ப்பு உள்ளதாக நகை வா்த்தகா்கள், பொருள் சந்தை நிபுணா்கள் கருத்து தெரிவித்திருந்தனா்.

மற்ற செய்திகள்