'சென்னை ஐடி பார்க்-களில் அறிமுகமாக இருக்கும் புதிய சிறப்பம்சங்கள்...' - 'என்ட்ரன்ஸ்'ல இருந்து 'எக்சிட்' வரைக்கும் பக்கா சேஃப்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உலக நாடுகளை போல இந்தியாவிலும் பல துறைகளில் பல்வேறு புதிய நடைமுறைகளும், அலுவலக கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

'சென்னை ஐடி பார்க்-களில் அறிமுகமாக இருக்கும் புதிய சிறப்பம்சங்கள்...' - 'என்ட்ரன்ஸ்'ல இருந்து 'எக்சிட்' வரைக்கும் பக்கா சேஃப்...!

அதேபோல் சென்னை ஐ.டி துறை வளாகங்களும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்றார்போல வேலை இடத்தை நிறுவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவாமல் இருக்க வலியுறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானது சமூக விலகல். தொழில் துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி வரும் போது கண்டிப்பாக அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அலுவலகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதை உறுதி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் உயர்நிலை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

பொதுவாக இந்த செயலியை உருவாக்க கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாகும் எனவும், விலை உயர்ந்தது என்றாலும், ஐ.டி பூங்காக்கள் ஊழியர்களைப் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து வருகின்றன.

இந்த செயலி வழக்கம் தொழில்நுட்ப வளாகங்களில் நடைமுறைக்கு வரும் போது ஊழியர்கள் பணியிடத்தின் நுழைவாயிலிலிருந்து கழிவறை வரை கடுமையான வேறுபாடுகளைக் கவனிக்கப் போகிறார்கள் என்றும் கூறுகின்றனர் அத்தொழில் நுட்பவாதிகள்.

பணிக்கு திரும்பும் ஊழியர்களை பரிசோதனை செய்ய தானியங்கி ஸ்கேனர்கள் நுழைவாயிலில் அமைக்கப்படும், உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த தனியே வசதியான இடம் அமைக்கப்படும், மேலும் QR குறியீடு மூலம் லிப்டினை இயக்கலாம்.

அடையாள அட்டைகள் மூலம் கதவினை திறத்தல் மூடுதல் போன்ற வசதிகள் செய்யப்படுகிறது. குடிநீர்  விநியோகிப்பாளர்களுக்கு கூட சென்சார்கள் இருக்கும், இதனால் வேலையிடத்தில் ஒருவரை ஒருவர் தொடுவதைத் தவிர்க்கலாம். மேலும் கழிவறைகளிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து வருகின்றனர்.

இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு அறிக்கையின் படி, கோயம்புத்தூரில் உள்ள இந்தியா லேண்ட் தொழில்நுட்ப பூங்கா இந்த மாற்றங்களில் சிலவற்றை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.

இந்தியா லேண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலாய் குமரன் இது பற்றி கூறும் போது, 'எங்களது நிறுவனங்களில் பணிக்கு திரும்பும் ஊழியர்களுக்கு ஏற்றவாறு லிஃப்ட் செயல்பாடு, ஒருவரை ஒருவர் தொடாமல் சமூக விலகளோடு பணிபுரியும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். மேலும் பல்வேறு நடவடிக்கைகள் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி எங்கள் ஊழியர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளோம்' எனக் கூறியுள்ளார்.

மேலும் அறம் ரியால்டியின் நிர்வாக இயக்குனர் ஆர்.முருகேசன் கூறும்போது, 'சுமார் 60 மில்லியன் சதுர அடி இருக்கும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் SEZ-களில் பணியாளர்களின் நலனுக்கு, சுழலும் கதவுகள் மற்றும் பலவற்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதற்கு குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் தேவைப்படும், இருந்தாலும் எங்களின் ஊழியர்களின் நலனுக்காகவும், அவர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இம்மாதிரியான செயல்முறைகள் கண்டிப்பாக அவசியம்' எனக்கூறியுள்ளார்.

மேலும் இம்மாதிரியான நடவடிக்கைகளால் சென்னை ஐ.டி பூங்காகள் உலக அளவுக்கு சிறந்த கட்டமைப்புகளை உடையதாக மாறும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்