'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!

சென்னையில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் நீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் ஒஎம்ஆரில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளன. ஒஎம்ஆர் சாலையில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கு தேவையான, குடிநீரை, அவர்களே எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் தங்களின் அலவலகங்களில், தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளன.

ஓஎம்ஆர் பகுதிக்கு தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவற்றில் 60 சதவீதம் தண்ணீரை ஐடி நிறுவனங்கள் தான் பயன்படுத்துகின்றன. சிப்காட் பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. தற்போது மக்கள் குடிநீருக்கே அல்லல்படுவதால் ஐடி நிறுவனங்களுக்கு தண்ணீர் கிடைப்பது கடினமாகி உள்ளது. 

WATERCRISIS, CHENNAI