‘சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் அலுவலகத்திலேயே செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அடையாறிலுள்ள இறால் ஏற்றுமதி நிறுவன ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாரில் உள்ள அஸ்வினி ஃபிஷரிஷ் என்ற இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 4 நாட்களாக அலுவலகத்திலேயே இருந்த ஊழியர் செந்தில்குமார் நேற்று அலுவலக அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் செந்தில்குமாருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து செந்தில்குமாருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். வரிமான வரி சோதனையால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஹார்ட் டிஸ்க் ஒன்று போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் அவர் சில பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பான வீடியோக்களையும், பெண்கள் கழிப்பறையில் ஸ்பை கேமரா பொருத்தி அவர் எடுத்த வீடியோக்களையும் சேகரித்து வைத்துள்ளதாகவும், அந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.