“இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது!”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்!’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அருகே போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கணவா் - மனைவி உள்பட 5 போ் சிக்கியுள்ளனர்.
சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி ராணி இருவரும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் பணம் செலுத்தி ஏமார்ந்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் புகாரளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செய்த அதிரடி விசாரணையில் மோகன்தாஸ், ராணி, அவா்களது கூட்டாளிகள் காா்த்திக், மோகன்ராஜ், பாா்த்திபன் ஆகிய 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர், இவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவும் செய்தனா்.
கைது செய்யப்பட்ட இவா்களிடம் நடத்திய விசாரணையில் சில உண்மைகள் தெரியவந்துள்ளன. அதன்படி, ராணியின் சகோதரருக்கு அறிமுகமான பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தில் கப்பல் படையில் துப்பரவுப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் அதிகாரியை தனக்குத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அவர் மூலம் வேலை கிடைக்கும். அதற்கு நமக்கு கமிஷனும் கிடைக்கும் என்று மோகன்தாஸிடமும் ராணியிடமும் கூறியுள்ளார்.ப் இதை நம்பிய மோகன்தாஸ், ராணி மற்றும் அந்தப் பெண் மூவரும் திருச்சியைச் சேர்ந்த சாமியார் ஒருவரிடம் குறி கேட்க, சாமியாரோ, `இனி உங்களுக்கு நல்ல காலம்.. நான் சொல்லல கட்டம் சொல்லுது' என்று அருள்வாக்கு கூற, அதே முறுக்கேறிய மூளையுடன் மூவரும் தொழிலில் இறங்க, பின்னாலேயே இவர்களின் திட்டத்தை அறிந்த சாமியாரும் அவரின் உறவினர் ஒருவரும் உடன் இறங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் அரசு வேலைக்காகக் காத்திருந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இந்தக் கும்பல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதானவர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்