Nadhi mobile
Maha Others

விவகாரத்து பெற்று பிரிஞ்சு வாழும் கணவன் மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவாகரத்து பெற்று பிரிந்துவாழும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு நடந்துகொள்ள வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

விவகாரத்து பெற்று பிரிஞ்சு வாழும் கணவன் மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!

விவாகரத்து பெற்றபின்னர் தங்களது குழந்தைகளை காண வரும் துணையை, சரியாக நடத்துவதில்லை என்ற வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இதுபோன்ற வழக்குகள் வேதனை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவது மன வேதனை அளிக்கிறது" என்றார்.

பாதிப்பு

பிரிவு என்னும் துரதிருஷ்டத்தால் கணவன் மனைவிக்கு ஏற்படும் பாதிப்புகளை விட குழந்தைகளுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் குழந்தைகள் வலியை அனுபவிப்பதாகவும் நீதிபதி கவலை தெரிவித்தார். மேலும், திருமணம் என்பது தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கமம் எனவும் அதன்மூலம் கிடைக்கும் குழந்தைகளை வளர்ப்பது  கணவன் மனைவி ஆகிய இவருடைய கடமை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Chennai Highcourt advice Husband and wife separated by divorce

மேலும், மணவாழ்க்கையில் இருந்து பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் அன்புடன் நடந்துகொள்ளாவிட்டாலும் குழந்தைகளுக்கு முன்னர் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி பேசுகையில்,"கணவன் மனைவி பிரிந்த பின்னரும் இருவரையும் சந்திக்கவும் அவர்களிடமிருந்து அன்பு மற்றும் பாசத்தை பெறுவதற்கு குழந்தைகளுக்கு உரிமை உண்டு. தங்கள் துணையை புறக்கணிப்பதன் மூலம் குழந்தைகள் அவரை அலட்சியமாக நினைக்க தூண்டுவது மனிதாபிமானமற்ற செயல். அதுமட்டுமல்லாமல் இது குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலாகும்" என்றார்.

விருந்தினர்

பெற்றோரிடம் இருந்து அன்பை பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை எனக் குறிப்பிட்ட நீதிபதி இதில் ஒருவர் தவறிழைத்தாலும் அது குழந்தையை தவறாக நடத்துவதுதற்கு சமம் எனவும் எச்சரித்திருக்கிறார். மேலும், பெற்றோர்கள் குழந்தைகளின் முன்னிலையில் நட்புணர்வாக பழகவேண்டும் எனவும் அதுவே குழந்தைகளின் மனநலனுக்கு நன்மை சேர்க்கும் எனவும் நீதிபதி வலியுறுத்தியிருக்கிறார்.

பிரிந்து வாழ்ந்தாலும் தங்களது குழந்தைகளை பார்க்க வரும் துணையை விருந்தினர்கள் போல நடத்த வேண்டும் எனவும் குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

DIVORCE, HUSBAND, WIFE, விவாகரத்து, கணவன், மனைவி

மற்ற செய்திகள்