தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட வேண்டும். அதிரடி காட்டிய ஐகோர்ட்.. உத்தரவின் பின்னணி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019-2021ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 'கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் அவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே எங்களுடைய உரிமம் காலத்தை நீட்டிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பார் உரிமம் பெற்றவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசிற்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, வருமானம் வருகிறது என்பதற்காக அரசு டாஸ்மாக் கடைகள் பார்களை நடத்தக் கூடாது. டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுப்பதற்கு விடுக்கப்பட்ட டென்டர் மற்றும் ஸ்நாக்ஸ் விற்க விடுக்கப்பட்ட உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், 'தமிழ்நாடு தடை சட்டம் 1937-ன்படி டாஸ்மாக் கடைகளுக்கு அங்கு விற்பனை செய்யும் மதுபானங்களை அந்த கடைகளுக்கு அருகே பார் அமைத்து பருக அனுமதி அளிக்க உரிமையில்லை. பார்களில் ஸ்நாக்ஸ் விற்க மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுக்க உரிமம் அளிக்கவும் அனுமதியில்லை. பார்கள் அனைத்தும் தனியார்களுக்கு உரிமத்துடன் தரப்படுவதால் அதன் மீது டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும்' என வலியுறுத்தினார்.
டாஸ்மாக் கடைகள் மதுபான விற்பனைக்கு மட்டுமே உரிமம் பெறுகின்றன. அத்துடன் மதுபானத்தை குடிக்க பார் அமைக்க அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பொது இடத்தில் பார்கள் இருப்பதால் மது குடிப்பவர்களால் பொதுமக்களுக்கு மிகவும் தொந்தரவு அளிக்கும் செயலாக மாறிவிடும். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இந்த பார்களை உடனடியாக மூட வேண்டும். முன்னதாக உரிமம் அளிக்கப்பட்ட பார்களை 6 மாதங்களுக்குள் நிச்சயம் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், 1937ஆம் ஆண்டு மெட்ராஸ் தடுப்பு சட்டத்தின்படி மதுபான குடிப்பவர்களால் சமூதாயத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை தடுக்க மது அருந்த தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் மது குடிப்பதற்கு தடைவிதிக்கவில்லை. மது விற்பனை தயாரிப்பு போன்றவற்றிற்கு இந்தச் சட்டம் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்