‘காதலர்’ தினத்தன்று நடக்கவிருந்த ‘திருமணம்’... ‘வாட்ஸ்அப்பில்’ வந்த ஒரு மெசேஜால்... முடிவுக்கு வந்த ‘10 ஆண்டு’ காதல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் காதலர் தினத்தன்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று மணமகனுக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜால் நிறுத்தப்பட்டுள்ளது.

‘காதலர்’ தினத்தன்று நடக்கவிருந்த ‘திருமணம்’... ‘வாட்ஸ்அப்பில்’ வந்த ஒரு மெசேஜால்... முடிவுக்கு வந்த ‘10 ஆண்டு’ காதல்...

சென்னையைச் சேர்ந்த நரேந்திரன் என்பவரும் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கல்லூரி காலத்திலிருந்து 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்துவந்த நேரத்தில் நரேந்திரனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், அவருடைய காதலி வேலை பார்க்கும் இடத்தில் வேறு ஒருவருடன் பழகி வருவதாக கூறப்பட்டிருந்துள்ளது. மேலும் அதில் அவர்களுடைய சேட்டிங் விவரமும் இருந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நரேந்திரன் தன் காதலிடம் இதுபற்றி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் திருமணத்தை நிறுத்த முடிவு செய்த அவர் திருவொற்றியூர் போலீசாரிடமும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் விசாரித்துவந்த நிலையில், பெண் வீட்டாரும் திருமணத்தை நிறுத்திய நரேந்திரன் மீது தண்டையார்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில்,  இரு புகார்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

WHATSAPP, CHENNAI, MARRIAGE, LOVE