'சென்னையில் வாக்கிங் போன இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை'... 'சிக்கிய ஐடி என்ஜினீயரின் பகீர் வாக்குமூலம்'... பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் நெத்தியடி பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது இளம்பெண் ஒருவர் வாக்கிங் செல்லும்போது அவர் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

'சென்னையில் வாக்கிங் போன இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை'... 'சிக்கிய ஐடி என்ஜினீயரின் பகீர் வாக்குமூலம்'... பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் நெத்தியடி பதில்!

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சேர்ந்த நிமிஷா என்ற இளம் பெண் தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் நிமிஷாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனே தனக்கு நடந்த கொடுமை குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட அவர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

Chennai Girl sexually harassed by a motorist while walking

இதையடுத்து இந்த சம்பவம் காவல்துறையின் கவனத்திற்குச் சென்ற நிலையில், உடனடியாக நிமிஷாவை தொடர்பு கொண்ட சென்னை போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்த போலீசார், அந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து அந்த வண்டியில் வந்த நபரைக் கண்டுபிடித்தார்கள். அப்போது அந்த நபர் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது.

Chennai Girl sexually harassed by a motorist while walking

இந்நிலையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும், பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. மேலும் இதை ஒரு ஜாலிக்காக செய்ததாக அந்த இளைஞர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 'Behindwoods'க்கு பிரத்தேயகமாக பேட்டி அளித்த நிமிஷா, தனது முகத்தை மறைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இலை எனக் கூறி பேட்டி அளித்துள்ளார்.

இதுபோன்று எந்த பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையில் தான் இறங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு உதவியாக இருந்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உதவிய சென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். நிமிஷா எடுத்த இந்த தைரியமான முடிவைச் சமூகவலைத்தளங்களில் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்