‘யாராவது காப்பாத்துங்க’.. கதறியழுத மாணவர்கள்.. நண்பர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ‘இன்ஜினீயரிங்’ மாணவர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற இன்ஜினீயரிங் மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘யாராவது காப்பாத்துங்க’.. கதறியழுத மாணவர்கள்.. நண்பர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ‘இன்ஜினீயரிங்’ மாணவர்..!

சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் இன்ஜினீயரிங் மாணவர்கள் 10 பேர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட இடங்களை சுற்றுப் பார்த்துள்ளனர். பின்னர் கடற்கரை கோயிலுக்கு தெற்கு பக்கம் உள்ள கடலில் மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர்.

அப்போது தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ்வரராவ் (20) என்ற மாணவர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் நண்பனை காப்பாற்ற கோரி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதற்கு கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று மாணவர் மாயமாகிவிட்டார்.

உடனே அப்பகுதியில் இருந்த மீனவர்கள் மாணவரை தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து சுமார் 3 மணிநேரம் கழித்து மாணவர் சைலேஷ்வரராவ்வின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

COLLEGESTUDENT, CHENNAI, ENGINEERING, MAHABALIPURAM, SEA, DIES