'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'?... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு தலைக்கவசம் அணிவித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'?... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ!

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. இந்தநிலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது செல்ல நாயை அமரவைத்து, அதற்கும் ஒரு தலைக்கவசத்தை அணிவித்து அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் கழுத்துப்பட்டை பொருத்தாமல் வாகனத்தை ஓட்டுகிறார். அதே நேரத்தில் அவரது நாய்க்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தலைக்கவசமும் தரமற்றவை என்பதையே காட்டுகிறது. இது பார்ப்பதற்கு விளையாட்டாக இருந்தாலும், நிச்சம் இது ஆபத்தில் போய் முடியும் செயல் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

TWITTER, DOG, CHENNAI, PILLION, VIRAL VIDEO, WEARING HELMET