கோமியம் குடிக்கச்சொல்லி டார்ச்சர்.. மருமகள் எடுத்த விபரீத முடிவு... நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்புத் தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக மாமியாருக்கு மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ தம்பதி
சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிந்து வந்தவர் மரியானோ ஆண்டோ புருனோ(36). இவருக்கும் மன நல மருத்துவராக பணிப்புரிந்து வந்த அமலி விக்டோரியாவிற்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே, கூடுதலாக வரதட்சணை கேட்டு அவ்வப்போது அவரது கணவர் மற்றும் மாமியார் சச்சரவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அவர்களது வீட்டு கழிவறையில் விக்ட்டோரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கைது
இதனையடுத்து விக்ட்டோரியாவின் கணவர், மாமியார் அல்போன்ஸாள் மற்றும் மாமனார் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வரதட்சிணை காரணமாக விக்ட்டோரியா துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்பதற்க்காக மருமகளை கோமியம் குடிக்கும்படியும் மாமியார் டார்ச்சர் செய்திருப்பதும் விசாரணையில் அம்பலமானது.
7 வருட சிறை
மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட கணவர் மரியோனா மற்றும் மாமியார் அல்போன்ஸாள் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது. விக்ட்டோரியாவின் மாமனாரை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு
இதனையடுத்து மரியோனா மற்றும் அல்போன்ஸாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில்,விக்ட்டோரியா தற்கொலை செய்துகொள்ள குற்றம்சாட்டப்பட்ட இருவரும் காரணமாக இருந்தது தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமை ஓடு மாதிரி தோல்..நாட்டிலேயே முதல் முறை.. பிறந்த குழந்தையை பார்த்து திகைத்த டாக்டர்கள்..!
மற்ற செய்திகள்