‘சென்னையில் மொத்தம் 217 பேருக்கு கொரோனா’.. ‘இந்த’ ஏரியாலதான் பாதிப்பு கொஞ்சம் ‘அதிகம்’.. வெளியான லிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலம் வாரியாக சென்னை கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் சென்னையில் வீடுகளுக்கே காய்கறிகளை கொண்டு கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. அந்தவகையில் இன்று 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சென்னை விமான நிலையம் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிபடியாக குறைந்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். அந்த வகையில் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று (17.04.2020) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மண்டலம் வாரியாக சென்னை கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 65 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/Ix1IpvyCvu
— Greater Chennai Corporation (@chennaicorp) April 17, 2020