Darbar USA

'பிரிட்ஜ்' ரூ.200, சைக்கிள் ரூ.50... 'செம' சந்தை... 'சென்னை' மாநகராட்சியின் அசத்தல் ஐடியா !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை, மீண்டும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் சந்தை பெசண்ட் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.

'பிரிட்ஜ்' ரூ.200, சைக்கிள் ரூ.50... 'செம' சந்தை... 'சென்னை' மாநகராட்சியின் அசத்தல் ஐடியா !

இந்த சந்தையில் பயன்படுத்த தகுந்த பழைய பொருட்களை பொதுமக்கள் விற்பனைக்கு வைத்தனர். அதன்படி பிரிட்ஜ் ரூ.200-க்கும், மைக்ரோ ஓவன் ரூ.100-க்கும், சோபா செட் ரூ.100-க்கும், சிறுவர் சைக்கிள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆடைகள் ரூ.10-க்கும், காலணி ரூ.10-க்கும், ஷு ரூ.20-க்கும் விளையாட்டு பொருட்கள் ரூ.10-க்கும் விற்கப்பட்டன.

10 ரூபாய் தொடங்கி 200 ரூபாய் வரை பழைய பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் சுமார் 1800 பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் வழியாக ரூபாய் 22 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது.  பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை இந்த சந்தைக்கு நன்கொடையாகவும் வழங்கலாம்.

இன்று மாலை 6 மணி வரை இந்த சந்தை பெசண்ட் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும். இதுதவிர இந்த பழைய பொருட்கள் சந்தை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CHENNAICORPORATION