‘சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதி’.. ‘அவர் சென்ற இடம் வெளியீடு’.. ‘அந்தநாள் அங்கபோன எல்லோரும் இத பண்ணணும்’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி சென்ற இடம் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா அப்ளிகேசன் சென்டருக்கு கடந்த 15.03.2020 தேதியில் சென்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த இடத்திற்கு அதே நாளில் சென்று வந்த அனைவரும் வீட்டிற்குள்ளேயே உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அந்த இடத்திற்கு அதே நாளில் சென்று வந்த நபர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 044 2538 4520 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புகளை தடமறிதல்
இதே நாளில் இந்த இடத்திற்கு சென்றவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 044 2538 4520 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
-ஆணையர்
பெருநகர சென்னை மாநகராட்சி#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/G2d8p8Q0GK
— Greater Chennai Corporation (@chennaicorp) March 31, 2020
Contact Tracing.
Kindly share so it reaches everyone.#Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/sYZl3KT93Q
— Greater Chennai Corporation (@chennaicorp) March 31, 2020