தேர்தல் முடிவுகள் : 22 வயசு தான்.. ஜெயிச்சு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பெண் .. யாருப்பா இவங்க?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றிருந்தது.

தேர்தல் முடிவுகள் : 22 வயசு தான்.. ஜெயிச்சு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பெண் .. யாருப்பா இவங்க?

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.

மொத்தமாக, 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

அரசியலில் இளைஞர்கள்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும், பெருவாரியான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் அதிகம் முன்னிலையும், வெற்றியினையும் பெற்று வருகிறது. முன்னதாக, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இளைஞர்கள் அதிகம் பேரும் களமிறங்கியிருந்தனர்.

அரசியல் பக்கம் இளைஞர்களும் அதிக கவனத்தை திருப்பியுள்ளதால், தேர்தல் பிரச்சார களமும் இளம் படையுடன் அதிகம் சூடு பிடித்திருந்தது. அது மட்டுமில்லாமல், இன்றைய தேர்தல் முடிவிலும், சில இளைஞர்கள் வெற்றி பெற்று அசத்தியும் வருகின்றனர்.

BE பட்டதாரி

அந்த வகையில், திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி நகராட்சி வார்டில், 22 வயதான இளம்பெண்னும், BE பட்டதாரியுமான சினேகா, சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அதே போல மற்றொரு இளம்பெண்ணும் தேர்தல் களத்தில் இறங்கி, வெற்றி நடை போட்டுள்ளார்.

நிலவரசி துரைராஜ்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 136 ஆவது வார்டில், 22 வயதுக்குட்ப்பட்ட இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ், திமுக சார்பில் தேர்தலில் களமிறங்கினார். இவரது தந்தையும், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் செயல்பட்டு வருகிறார். தனது வார்டுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பேன் என்றும், நிலவரசி தெரிவித்திருந்தார்.

chennai corporation dmk nilavarasi thurairaj won in election

சென்னை மாநகராட்சி

தொடர்ந்து, இன்று வெளியான தேர்தல் முடிவில், சென்னை மாநகராட்சி 136 வது வார்டில் போட்டியிட்ட நிலவரசி தங்கராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். கல்லூரி படிப்பு முடிக்காத நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலவரசிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

DMK, TN ELECTIONS 2022, TN LOCAL BODY ELECTION, NILAVARASI THURAIRAJ

மற்ற செய்திகள்