‘எந்த அறிகுறியும் இல்லாம கொரோனா பரவிட்டு இருக்கு’!.. ‘அதனால இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே ஹாஸ்பிட்டல் போங்க’.. சென்னை மாநகராட்சி ஆணையர் ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று பரவி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

‘எந்த அறிகுறியும் இல்லாம கொரோனா பரவிட்டு இருக்கு’!.. ‘அதனால இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே ஹாஸ்பிட்டல் போங்க’.. சென்னை மாநகராட்சி ஆணையர் ‘முக்கிய’ தகவல்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தும் நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வாசனை தெரியாதது, வயிற்றுப்போக்கு, அதிக சோர்வு ஆகிய அறிகுறிகள் இப்போது கொரோனா தொற்றில் தென்படுகின்றன. இந்த மாதிரியான அறிகுறிகள் யாருக்கு இருக்கிறது என்பதை காய்ச்சல் கண்டறியும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பதிவுசெய்து வருகின்றனர்.

Chennai corporation commissioner Prakash press meet

எந்த அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. ஆக்ஸிமீட்டரில் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 95-க்கும் கீழ் குறைந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான அறிகுறி உள்ளவர்களை உடனே அருகில் நடைபெறும் காய்ச்சல் முகாம்களுக்கு அனுப்பி, அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்கிறோம். பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் உடனடியாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

Chennai corporation commissioner Prakash press meet

தன்னார்வலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களுக்கு பொதுமக்கள் தாங்களாகவே சென்றும் பரிசோதித்துக் கொள்ளலாம். இப்போது சென்னையில் 50 காய்ச்சல் முகாம்கள் உள்ளன. இன்னும் 2-3 நாட்களில் 400 ஆக அவை அதிகரிக்கப்படும். கடந்த முறை கையாண்ட நடைமுறையைத்தான் இந்த ஆண்டும் பின்பற்றுகிறோம். காய்ச்சல், தலைவலி உள்ளவர்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும்’ என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்