‘கோடம்பாக்கத்தை’ பின்னுக்குத் தள்ளிய... ‘சென்னையின்’ மற்றொரு ‘ஏரியா’... 500-ஐ தாண்டி கிடுகிடுவென உயர்ந்த பகுதிகளின் நிலவரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மண்டலங்களில் கோடம்பாக்கத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, பல வாரங்களுக்குப் பின்னர் ராயபுரம் மீண்டும் முதலிடத்தில் உள்ளது.

‘கோடம்பாக்கத்தை’ பின்னுக்குத் தள்ளிய... ‘சென்னையின்’ மற்றொரு ‘ஏரியா’... 500-ஐ தாண்டி கிடுகிடுவென உயர்ந்த பகுதிகளின் நிலவரம்..!

சென்னை மாநகரில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, நேற்று ஒரே நாளில் திரு.வி.க.நகர் மண்டலத்தில் 42 பேரும், கோடம்பாக்கத்தில் 17 பேரும் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கோடம்பாக்கம் 563 ஆகவும், திரு.வி.க.நகர் 519 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த 3 மண்டலங்களிலும், நாளுக்குநாள் எண்ணிக்கை அதிகரித்து, போட்டிப் போட்டிக்கொண்டு முதலிடத்தில் வருகின்றன. தேனாம்பேட்டையில் 360 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 231 பேருக்கும், வளசரவாக்கத்தில் 274 பேருக்கும், அம்பத்தூரில் 167 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.