'வேகமெடுக்கும் கொரோனா'... 'சென்னையில் தீவிரமாகப் போகும் கட்டுப்பாடுகள்'... அமைச்சர் விஜயபாஸ்கர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பரவல் வேகமெடுக்கும் நிலையில், அதனைத் தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயாராகியுள்ளது. அதனை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, ''புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு இங்குச் சிகிச்சை அளிக்கப்படும். அதே நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் இங்கு உள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. இதனிடையே சென்னையில் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்




