RRR Others USA

இது ஆபத்து.. சென்னையில் ஏழே நாளில் 103% ஸ்பைக்.. டேட்டா பாருங்க

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இது ஆபத்து.. சென்னையில் ஏழே நாளில் 103% ஸ்பைக்.. டேட்டா பாருங்க

கடந்த ஆண்டு முதல் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, மக்கள் கடுமையான அச்சுறுத்தலில் ஆழ்த்தியிருந்தது. அதே போல, இதன் உருமாறிய தொற்றுகளும் தொடர்ந்து, உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் என்னும் உருமாறிய தொற்றும் வேகமாக, பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும், பல மாநிலங்களில், இதன் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விமானத்தில் நடந்த அடிதடி.. 80 வயது முதியவரை தாக்கிய பெண்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

சென்னையில் அதிகரிக்கும் எண்ணிக்கை

அதே போல, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும், பல மாதங்களுக்கு பிறகு, கொரோனா தொற்றின் பாதிப்பு பன்மடங்காக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வரை, தினசரி பாதிப்பு 115 ஆக இருந்தது. பல மண்டலங்களில் நோயின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.

அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

chennai corona cases increased by 103 percent in a week

இதன் காரணமாக, சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 ஆம் தேதியன்று, 146 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மறுநாளான 25 ஆம் தேதி அன்று, 165 ஆக உயர்ந்தது. தொடர்ந்து, 26 ஆம் தேதி, 171 ஆகவும் உயர்ந்தது.

அதே போல, 28 ஆம் தேதியன்று, 194 ஆக மாறிய எண்ணிக்கை, நேற்று மட்டும், ஒரே நாளில் 294 பேராக உயர்ந்தது. ஒரே நாள் வித்தியாசத்தில், கிட்டத்தட்ட 50 % சதவீதம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை கூடியுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 103 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை

chennai corona cases increased by 103 percent in a week

அதே போல, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில், முன்பு போல தடுப்புகள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள், கொரோனா தொற்று பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முகக்கவசம் அணிந்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கவனமாக செயல்படும் படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CHENNAI, CORONA CASES

மற்ற செய்திகள்