'144 தடை'...'சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு'... சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 15ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

'144 தடை'...'சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு'... சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவுவதை தடுப்பதற்காக, பிரதமர் மோடி ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவரை பிறப்பித்தார். கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சிலர் அதனை மதிக்காமல் வெளியில் சுற்றுவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இன்று சென்னை பாடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாடியில் உள்ள பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. இது மக்களின் பொறுப்பின்மையை காட்டுவதாக பலர் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''சென்னையில் ஏப்ரல் 15ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை நீட்டிக்கப்படுவதாகவும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் தெரிவித்துள்ளார்.

CORONA, CORONAVIRUS, POLICE, CORONA LOCKDOWN, CHENNAI, A K VISWANTHAN