'107 கிலோ எடை'... 'சென்னையில் உருவான பிரம்மாண்ட ட்ரம்ப் இட்லி'... அசத்திய சமையல்காரர் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வரவேற்கும் விதமாக, டிரம்ப், மோடியின் உருவப் படம் பொறிக்கப்பட்ட 3 இட்லிகள் 107 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

'107 கிலோ எடை'... 'சென்னையில் உருவான பிரம்மாண்ட ட்ரம்ப் இட்லி'... அசத்திய சமையல்காரர் !

2 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வந்துள்ளார். முதலில் அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்ணர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

இந்நிலையில் ட்ரம்பை வரவேற்கும் நோக்கில் சென்னையைச் சேர்ந்த சமையல்காரர் மற்றும் உணவுக் கலைஞருமான இனியவன், 107 கிலோ எடைகொண்ட இட்லியில் மோடி, மற்றும் ட்ரம்பின் முகங்களை வடிவமைத்துள்ளார். இதற்காக 36 மணி நேரம் செலவிட்டு 6 பேர் உழைப்பில், மொத்தம் மூன்று இட்லிகளை தயாரித்துள்ளனர்.

ஒரு இட்லியில் அமரிக்க அதிபர் ட்ரம்ப் முகமும், மற்றொன்றில் மோடி முகமும், மூன்றாவது இட்லியில் இந்திய, அமெரிக்க தேச கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

NARENDRAMODI, IDLI, DONALD TRUMP, CHENNAI CHEF