சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ‘பிளாட்பார்ம்’ டிக்கெட் விலை உயர்வு..! எவ்ளோனு ‘செக்’ பண்ணிக்கோங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோடை விடுமுறையை முன்னிட்டு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் விலை 3 மாதங்களுக்கு உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ‘பிளாட்பார்ம்’ டிக்கெட் விலை உயர்வு..! எவ்ளோனு ‘செக்’ பண்ணிக்கோங்க..!

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகளை வழி அனுப்ப வருபவர்கள் பிளார்ட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். கடந்த 2015ம் ஆண்டு 5 ரூபாயில் இருந்த பிளார்ட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 3 மாதங்களுக்கு பிளார்ட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையின் போது வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 3 மாதங்களுக்கு பிளார்ட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. 3 மாதங்கள் கழித்து மீண்டும் 10 ரூபாய்க்கே பிளார்ட்பார்ம் டிக்கெட் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAILWAY, INDIANRAILWAYS, CHENNAI, PLATFORMTICKET, CENTRALRAILWAYSTATION