'சென்னையில் பரபரப்பு'... 'ஓட்டு போட போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சர்க்கார் படத்தை நிஜமாக்கிய சம்பவம்'... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சர்க்கார் படத்தை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

'சென்னையில் பரபரப்பு'... 'ஓட்டு போட போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சர்க்கார் படத்தை நிஜமாக்கிய சம்பவம்'... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 8:30 மணிக்கு வாக்கு செலுத்தச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் உங்களது ஓட்டை ஏற்கனவே ஒருவர் போட்டு விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் நான் இப்போது தான் ஓட்டுப் போட வந்துள்ளேன். அதற்குள் வேறு ஒருவர் எப்படி எனது ஓட்டை செலுத்த முடியும் எனக் கேட்டுள்ளார். அதோடு நான் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என உறுதியோடு கூறியுள்ளார்.  இதை அடுத்து ஆலோசனை செய்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனர். அதன்படி கிருஷ்ணன் வாக்களித்து வந்துள்ளார்.

Chennai Besant Nagar Voter caste his vote like Sarkar Vijay style

இதுகுறித்து பேசிய கிருஷ்ணன், ''இத்தனை வருட (70 வயது) அனுபவத்தில் இதுவே முதல்முறை. என்னுடைய ஓட்டை வேறொருவர் பதிவு செய்தது வருத்தமாக உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு இடையில் சிறிய அளவு வித்தியாசம் வரும் பட்சத்தில் மட்டுமே என்னுடைய வாக்கை எண்ணுவார்கள் என்று அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். இல்லை என்றால் என்னுடைய வாக்கை எண்ண மாட்டார்களாம். எனவே, இது தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்றார் கிருஷ்ணன்.

மற்ற செய்திகள்