'பொங்கல் விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வரும் மக்கள்'... தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொங்கல் பண்டிகைக்கு நெருங்கி வரும் வேளையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

'பொங்கல் விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வரும் மக்கள்'... தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை மக்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை காலங்களில் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் லட்சக்கணக்கான அளவில் திரள்வது வழக்கம். இதனையடுத்து பொங்கல் பண்டிகையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அண்ணா பூங்கா, சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா மற்றும் மாமல்லாத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைப் பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்