1 ரூபாய்க்கு ‘சானிடைசர்’ பாக்கெட்.. அசத்திய பிரபல நிறுவனம்.. எங்கெல்லாம் கிடைக்கும்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு ரூபாய்க்கு சிறிய சானிடைசர் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய கவின்கேர் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 ரூபாய்க்கு ‘சானிடைசர்’ பாக்கெட்.. அசத்திய பிரபல நிறுவனம்.. எங்கெல்லாம் கிடைக்கும்..?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சானிடைசர்களின் தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கவின்கேர் (CavinKare) நிறுவனம் சிறிய பாக்கெட்டுகளில் சானிடைசரை விற்க உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு முன்னரே 50 பைசாவில் Shampoo பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் சிறிய பாக்கெட்டுகளில் Shampoo-ஐ அறிமுகம் செய்தன.

இந்த நிலையில் கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக சானிடைசர் தேவை அதிகமாகியுள்ளதால், 1 ரூபாய்க்கு 2 மில்லி அளவில் சானிடைசர் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Nyle என்ற பெயரில் 90ML, 400ML, 800ML மற்றும் 5L என்ற அளவில் சானிடைசர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு புதிய தயாரிப்பை கொண்டுவர 18 மாதங்கள் ஆகும் என்ற நிலையில், கவின்கேர் சானிடைசர் ஏற்கனவே தயாரித்திருந்ததால் உடனடியாக கொண்டுவர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Shampoo பாக்கெட்டுகள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதோ, அதேபோல் இந்த சானிடைசர் பாக்கெட்டுகளும் மளிகை கடைகள், இணையம் மூலம் சாமானிய மக்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONA, CORONAVIRUS, CAVINKARE, SANITIZER