'5வது மாடி பால்கனிக்கு தவழ்ந்து வந்த 8 மாதக் குழந்தை'.. 'தடுப்பின் வழியே தவறி விழுந்து'.. 'உறைய வைக்கும் சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சௌகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்துவந்த 8 மாத குழந்தை ஜெனிஷா விளையாட்டு மனநிலையோடு பால்கனிக்கு தவழ்ந்து வந்துள்ளது.
ஆனால் குழந்தையை யாரும் கவனிக்காத நிலையில் குழந்தை பால்கனியில் இருந்த தடுப்புகளின் இடைவெளி வழியாக தவழ்ந்து வந்து கொண்டே கீழே விழுந்தது. 5வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து குழந்தை பால்கனியின் தடுப்பு வழியே தவறிக் கீழே விழுந்ததை அடுத்து பார்த்தவர்கள் பதைபதைப்புக்கு உள்ளாகினர்.
எனினும் குழுந்தை பால்கனியிலிருந்து கீழே விழும் பொழுது கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கை மீது விழுந்து பின்னர் தரையில் விழுந்துள்ளது. இதனை கவனித்த அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் கால்களிலும் கழுத்திலும் அடிபட்ட நிலையில் குழந்தை தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. மேலிருந்து விழுந்த குழந்தை நேரடியாக தரையில் விழாமல் ஹோண்டா ஆக்டிவா பைக் சீட்டில் விழுந்து கீழே விழுந்ததால் பெரிதாக அடிபடவில்லை என்று, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.