VIDEO: ஐயா 'வலிமை அப்டேட்' சொல்லுங்கையா...! 'கையில போர்டு வச்சிட்டு நின்னு...' 'பிரதமர் மோடியிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்...' - வைரல் வீடியோ உள்ளே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய பிரதமர் மோடி நேற்று (14-02-2021) சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வருகை தந்திருந்தார்.

VIDEO: ஐயா 'வலிமை அப்டேட்' சொல்லுங்கையா...! 'கையில போர்டு வச்சிட்டு நின்னு...' 'பிரதமர் மோடியிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்...' - வைரல் வீடியோ உள்ளே...!

அப்போது தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் வந்துகொண்டிருந்தபோது பிரதமர் மோடியிடம், அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை கையில் வைத்து காமித்துள்ளார்.அந்த போர்டின் முன்புறம், தமிழக முதல்வர், பிரதமர் படங்கள் இருந்தது. திருப்பினால் வலிமை அப்டேட் கேட்டு எழுதப்பட்டிருந்தது.

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தின் அப்டேட்டிற்காக அஜித்தின் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித் ரசிகர்களின் அந்த வீடியோ தற்போது பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்