சென்னை உள்ளிட்ட பகுதிகளில்.. முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க்.. காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பல இடங்களில், ஏர்டெல் நெட்வொர்க் சேவை திடீரென தடைப்பட்டதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ள ஆகியுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்லின் நெட்வொர்க் சேவை, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென முடங்கிப் போயுள்ளது.
இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடுமையான சிக்கலில் தவித்து வருகின்றனர். மொபைல் சேவை மட்டுமில்லாது, இணைய சேவையும் பயன்படுத்த முடியாத அளவில் சிக்கல் உருவாகியுள்ளது.
கடும் அவதி
இதன் காரணமாக, குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில், ஏர்டெல் நெட்வொர்க் மூலம் இணைய சேவை மற்றும் மொபைல் சேவை பயன்படுத்தி, வீட்டிலிருந்த படியே பணிபுரிந்து வரும் ஊழியர்கள், தங்களின் பணியைத் தொடர முடியாமலும், முதலாளிகளிடம் இது பற்றி தெரிவிக்க முடியாமலும், கடுமையான அவதிக்குள் ஆகியுள்ளனர்.
விளக்கம்
இந்நிலையில், நெட்வொர்க் முடக்கத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி, ஏர்டெல் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை புதிய தலைமுறை தகவல் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை உள்ளிட்ட சில இடங்களில், ஏர்டெல் சேவை முடங்கிப் போனதாகவும், தற்போது அதனை சரி செய்து விட்டோம் என்றும், மீண்டும் இயல்பு நிலைக்கு நெட்வொர்க் சேவை திரும்பியுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்