‘36 வருஷத்துக்குப் பின்’... ‘துவங்கிய சேவை’... ‘சென்னை டூ யாழ்ப்பாணம்’... மகிழ்ச்சியில் பயணிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர், சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘36 வருஷத்துக்குப் பின்’... ‘துவங்கிய சேவை’... ‘சென்னை டூ யாழ்ப்பாணம்’... மகிழ்ச்சியில் பயணிகள்!

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து, கடந்த 1983-ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பலாலியில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர், இந்த விமான தளம் ராணுவ பயன்பாட்டில் மட்டும் இருந்தது. இதனால், தமிழர்கள் வசிக்கும் வடக்கு பகுதிக்கு சென்று சேருவதற்கு, கொழும்பு சென்று அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாகத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதற்கிடையில், கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவுடன் இணைந்து, இலங்கை அரசு யாழ்ப்பாணம் விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், இந்தப் பணிகள் முடிவடைந்ததால், நிறுத்தப்பட்ட பல விமான சேவைகள், இன்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது.

அதன்படி, அலையன்ஸ் ஏர் நிறுவனம், காலை 7.45 மணிக்கு, சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து மட்டுமின்றி மதுரை, திருச்சி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் செல்ல உள்ளன. இது அப்பகுதி மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

சுற்றுத்தளமான யாழ்ப்பாணத்தில் கடுருகோடா திருக்கோவில் பிரபலமான கோவில். இதேபோல அங்கு உள்ள பிரம்மாண்ட நூலகம், ஒரு லட்சம் புத்தகங்களை கொண்டுள்ள நூலகம் ஆகும். தவிர யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதி – கடற்கரை ஓரங்களில் உள்ள பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டுக் குதிரைகள் சுற்றித்திரியும் பகுதியாகும். இது தவிர சுண்டிக்குளம் என்னும் பகுதி அற்புதமான சுற்றுலாத் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

SRILANKA, AIRINDIA, INDIA, YAZHPANAM, TRAVEL, TAMILAR