'முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா'... தனியார் மருத்துவமனையில் அனுமதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பா.வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS