‘கேட் திறந்து இருந்துச்சு’.. ரோட்டில் ‘அலறி’ துடித்த சிறுவன்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சாலையில் சென்ற சிறுவனை வேட்டை நாய் கடித்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி அருகே மோரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது 9 வயது மகன் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரது வீட்டுக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு சொந்தமான ராட்வில்லர் என்ற வேட்டை நாய் சிறுவனை கடுமையாக கடித்து குதறியுள்ளது. இதனால் சிறுவன் அலறி துடித்துள்ளான். இதில் சிறுவனின் தலை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற வெளிநாட்டு நாய்களை அழைத்துச் செல்லும்போது வாய்க்கவசம் இட்டு அழைத்து செல்ல வேண்டும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வகை நாய்கள் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், சிறுவன் குமார் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளான். அப்போது வீட்டின் கேட் திறந்து இருந்ததால் சாலையில் சென்ற சிறுவனை கடித்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.