இடிக்கப்பட்ட சென்னையின் பழமையான அடையாளம்.. 4 தலைமுறை நடிகர்களை கண்ட தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் அடையாளமாக விளங்கிய அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட சென்னையின் பழமையான அடையாளம்.. 4 தலைமுறை நடிகர்களை கண்ட தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்

வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில்  50  ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது.

கடந்த 1967-ம் ஆண்டு திறக்கப்பட்ட அகஸ்தியா திரையரங்கில் முதல் திரைப்படமாக இயக்குனர் பாலசந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’ திரையிடப்பட்டது. 

Chennai 50 Year Old Agastya Theatre Demolished

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், சிவகார்த்திகேயன் என நான்கு தலைமுறை நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. உலகம் சுற்றும் வாலிபன் பட ரிலீஸ் சமயத்தில் எம்.ஜி.ஆர். இந்த அகஸ்தியா தியேட்டருக்கு வருகை தந்துள்ளார்.

70 எம்.எம் திரையரங்கான அகஸ்தியா, டால்பி திரையரங்காக குருதிப் புனல் படத்தின் போது தரம் உயர்த்தப்பட்டது. 1004 இருக்கைகளுடன் செயல்பட்ட அகஸ்தியா திரையரங்கம் சென்னையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றாகும்.

Chennai 50 Year Old Agastya Theatre Demolished

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. 50 வருட நினைவுகளை சுமந்த திரையரங்கை ரசிகர்கள் பலர் கடைசியாக பார்வையிட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VADACHENNAI, CHENNAI, THEATRE, NORTH MADRAS

மற்ற செய்திகள்