"உங்க வாழ்க்கையே மாறப் போகுது.." நம்பி ஏமாந்த 150 பேர்.. "ஆட்டைய போட்டது மட்டும் இத்தன கோடியா??.." பகீர் 'ரிப்போர்ட்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் கௌரி சங்கரா.

"உங்க வாழ்க்கையே மாறப் போகுது.." நம்பி ஏமாந்த 150 பேர்.. "ஆட்டைய போட்டது மட்டும் இத்தன கோடியா??.." பகீர் 'ரிப்போர்ட்'...

ரியல் எஸ்டேட், சிட்பண்ட், வேலைவாய்ப்பு தரும் நிறுவனம் என பல தொழில்களையும் கௌரி சங்கரா செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனது நிறுவனத்தின் மூலம் வேலை மற்றும் தொழில் வாய்ப்பு உருவாக்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் வாங்கியுள்ளார். தான் நிச்சயம் சிறந்தவொரு வேலையை வாங்கித் தருவதாகவும், உங்கள் வாழ்க்கையே மாறப் போவதாகவும் கூறி, ஒவ்வொருவரிடமும், 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார் கௌரி சங்கரா.

இந்நிலையில், பணத்தை வாங்கிக் கொண்டு,  சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எந்த வேலையும் வாங்கிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் சங்கரா. இதனையடுத்து, சுமார் 150 பேர் வரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில், கௌரி சங்கரா மீது புகாரளித்துள்ளனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், 150 பேரிடம் 30 கோடி ரூபாய் வரை ஏமாற்றி, பண மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கௌரி சங்கராவைக் கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த சுரேந்தர், லட்சுமி ஆகியோரையும் கைது செய்தனர். கைதான மூன்று பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். அப்படி, ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால், தைரியமாக புகாரளிக்கவும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

FRAUD, EMPLOYMENT, CHENNAI, வேலைவாய்ப்பு, பண மோசடி

மற்ற செய்திகள்