"செருப்பு மட்டும் தான் டார்கெட்".. Flat ஏறி திருடும் கும்பல்.. சிசிடிவியில் சிக்கிய உண்மை.. திடுக்கிடும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து செருப்புகள் மற்றும் காலணிகள் காணாமல் போய் வந்த நிலையில், இதுகுறித்து நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

"செருப்பு மட்டும் தான் டார்கெட்".. Flat ஏறி திருடும் கும்பல்.. சிசிடிவியில் சிக்கிய உண்மை.. திடுக்கிடும் பின்னணி!!

Also Read | "அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!

சென்னையின் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து செருப்புகள் களவு போனதாக தெரிகிறது.

ஆரம்பத்தில் அப்பகுதி மக்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றும் ஆனால் நாளுக்கு நாள் தொடர்ந்து புத்தம் புது செருப்புகள் மாயமானதால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்ததாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது தான் இளைஞர் ஒருவர் செருப்புகளை திருடி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததை கவனித்துள்ளனர். தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் செருப்புகள் களவு போவது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் செருப்புகளை திருடிய இளைஞர் யார் என்பது பற்றியும் போலீசார் தேடி வந்துள்ளனர். இதன் முதல்கட்ட விசாரணையில், செருப்புகளைத் திருடும் இளைஞர் அதனை பல்லாவரம் வாரச்சந்தையில் விற்பதும் தெரியவந்துள்ளது. உடனடியாக இது சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் படித்து விசாரணை மேற்கொண்ட போது தாம்பரம் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஷ் குமார் தான் இதன் தலைவர் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு ரோஹித் குமார் மற்றும் அருள் எப்ரின் ஆகிய இளைஞர்கள் இரண்டு பேர் உதவியாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மூன்று பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கடந்து சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் செருப்புகளை திருடி அதனை பல்லாவரம் சந்தையில் குறைந்த விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

மூன்று பேரையும் போலீசார் கைது செய்த நிலையில், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

Also Read | குழந்தைக்கு பெயர் தேடிய போது.. கணவர் பற்றி தெரிய வந்த அதிர்ச்சி கலந்த உண்மை!!.. "இது தெரியாம கல்யாணமும் நடந்துடுச்சே"

CHENNAI, YOUTHS, ARREST, STEALING CHAPPALS

மற்ற செய்திகள்