'ஏதோ விளையாடிகிட்டு இருக்கான்னு நினைச்சோம்'... 'திடீரென கதறிய குழந்தை'... திக் திக் நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விளையாடிக் கொண்டிருந்த  சிறுவனின் தலை சில்வர் பானைக்குள் சிக்கி, அதனை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஏதோ விளையாடிகிட்டு இருக்கான்னு நினைச்சோம்'... 'திடீரென கதறிய குழந்தை'... திக் திக் நிமிடங்கள்!

ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யன் என்ற 3 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென  வீட்டில் இருந்த சில்வர் பானையை எடுத்து தனது தலையில் மாட்டிக்கொண்டான்.

தலை பானைக்குள் மாட்டி கொண்டதால் அதனை எடுக்க அவன் முயற்சி செய்துள்ளான். ஆனால் சிறுவன் எவ்வளவு முயன்றும் அவனால் முடியவில்லை. இதனால் சிறுவன் திவ்யன் அலறி துடித்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவனின் தந்தை மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து பானைக்குள் சிக்கிய திவ்யனின் தலையை வெளியே எடுக்க முயற்சி செய்தும் அது முடியாமல் போக, சிறுவன் அலறி துடித்தான்.

இதனால் பயந்துபோன சீனிவாசன் மற்றும் அங்கிருந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராகவன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சில்வர் பானையில் எண்ணெய்யை தடவி, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு சில்வர் பானைக்குள் சிக்கிய குழந்தையின் தலையை லாவகமாக வெளியே எடுத்தனர். இதனால் குழந்தை அழுகையை நிறுத்தியது. பத்திரமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு துறையினரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

CHENNAI, AVADI, VESSEL, CHILD