சென்னை விமான நிலையத்தில் 15 சிறுவனுக்கு கொரானோ அறிகுறி..! ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 15 சிறுவனுக்கு கொரானோ அறிகுறி..! ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை..!

சில தினங்களுக்கு முன்பு ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு கொரானோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை மத்திர அரசின் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார் உறுதி செய்தார். ஓமனில் சுமார் 12 ஆண்டுகளாக கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 27ம் தேதி விமானம் மூலம் தமிழகம் வந்தார்.

பின்னர் சளி, காய்ச்சல் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், கொரானோ வைரஸ் அறிகுறி இருந்ததால் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரை தனிவார்டில் தங்க வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரானோ வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து உடனடியாக விமான நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கொரானோ பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

CHENNAIAIRPORT, CORONAVIRUS